பொது செய்தி

தமிழ்நாடு

வெளியூருக்கு 90 சதவீதம் இயக்கம் 'காற்று வாங்கும்' உள்ளூர் பஸ்கள்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 வெளியூருக்கு 90 சதவீதம் இயக்கம் 'காற்று வாங்கும்' உள்ளூர் பஸ்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி போக்குவரத்து கழகம் சார்பில், வெளியூர் பஸ்கள் 90 சதவீதம் இயக்கப்படுகின்றன; ஆனால், டவுன் பஸ்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இயங்குகின்றன.கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த, 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, பொள்ளாச்சி போக்குவரத்து கழகத்தின் சார்பில், வெளியூர் பஸ்களின் இயக்கம் படிப்படியாக அதிகரித்து, தற்போது, 90 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதில், அதிகபட்சமாக, கோவைக்கு, 35 பஸ்களும்; திருப்பூருக்கு எட்டு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் பயணிகள் வருகை அதிகம் இருப்பதாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இவை தவிர, அருப்புக்கோட்டை, குமுளி, புதுக்கோட்டை உள்ளிட்ட தொலைதுார ஊர்களுக்கும் பஸ்கள் இயங்க துவங்கியுள்ளன.அதே சமயம், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து வழித்தடங்களிலும் சேர்த்து, 20 டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
அதுவும், குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், உள்ளூர் மக்கள் பஸ் இயக்கத்தை எதிர்பார்க்காமல், பைக், கார்களில் பயணம் செய்கின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்கள் செல்லாதது, உள்ளூர்வாசிகள் சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால், டவுன் பஸ்களுக்கு பயணிகள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. அதனால், டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, முக்கிய வழித்தடத்தில் மட்டும் குறைந்தளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X