பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கு காவலர் நியமனம்: 'தினமலர்' செய்தி எதிரொலி

Added : செப் 16, 2020
Share
Advertisement

உடுமலை:பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 'தினமலர்' செய்தி எதிரொலியாக கல்வித்துறை சார்பில், இரவுக்காவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.உடுமலை கல்வி மாவட்டத்திலுள்ள, பெரும்பாலான அரசுப்பள்ளிகளுக்கு, இரவுக்காவலர் இல்லை. தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில், சமூக விரோத செயல்கள், அதிகரித்து வருகிறது.சில நாட்களுக்கு முன், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், கதவை உடைத்து லேப்டாப் திருடப்பட்டது.பள்ளிகளில், தொடர்ந்து நடைபெறும், சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த, இரவு காவலர் நியமிக்க வேண்டும் என 'தினமலரில்', செய்தி வெளியானது. இதையடுத்து, கல்வித்துறை சார்பில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, இரவுக்காவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதே போல், பிற அரசுப்பள்ளிகளுக்கும், இரவு காவலர் நியமிப்பதுடன், கண்காணிப்பு கேமராக்களும், பொருத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X