பொது செய்தி

தமிழ்நாடு

கோவை ஆர்ய வைத்திய சாலை பார்மஸி தலைவர் கிருஷ்ணகுமார் கொரோனாவால் உயிரிழப்பு

Added : செப் 16, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஆர்ய வைத்திய சாலை பார்மஸி, கிருஷ்ணகுமார், கொரோனா, உயிரிழப்பு

கோவை: பத்மஸ்ரீ விருது வென்ற கோவை ஆர்ய வைத்திய சாலை பார்மஸியின் தலைவர் கிருஷ்ணகுமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

கோவை ஆர்ய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கிருஷ்ணகுமார்,68. இவர், கேரளா சொர்னுார் ஆயுர்வேத கல்லுாரியில் ஆயுர்வேதம் பயின்றவர். இந்திய அளவில் ஆயுர்வேத மருந்துகள், ஆயுர்வேத ஆராய்ச்சிகள், ஆயுர்வேத படிப்புகள் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கினார்.

ஆயுர்வேத சிகிச்சையில் சிறந்து விளங்கியதற்காக, கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதுதவிர, பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் டாக்டர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2015ல் இருந்து கோவை அவினாசிலிங்கம் பல்கலையின் வேந்தராகவும் இருந்து வருகிறார்.


latest tamil newsஇந்நிலையில், இருதய கோளாறு காரணமாக 10 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், நுரையீரலில் பிரச்னை இருந்ததை அடுத்து, அவினாசி ரோட்டில் பிரபல தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று(செப்.,16) இரவு சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், டாக்டர்கள் மற்றும் தொழில்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-செப்-202015:47:18 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) பிறப்பின் போதே ஒருவரின் இறப்பும் நிர்ணயம் செய்யப்படுகிறது . அவரவர் வினைப்படிதான் நடக்கும் . அவனருளாலே அவன் தாள் வணங்கி
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-செப்-202019:15:14 IST Report Abuse
A.George Alphonse இந்த காரோண கொள்ளை நோய் கொத்து கொத்தாக மனிதர்களை ஈவு,இரக்கம் இல்லாமல் கொன்று வருகிறதே எல்லா மதத்தினரும் இரவும்,பகலும் இந்த கொடிய வைரஸை உலகத்தை விட்டே அழிக்குமாறு வேண்டுகிறார்கள்.இன்னும் எந்த ஆண்டவனுக்கும் இரக்கமும்,கருணையும் வரவில்லை.
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
18-செப்-202013:04:44 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுமுதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் நோயை உண்டாக்குபவனும் அவனே நோயை அழிக்க உதவும் மருந்தைக் கண்டுபிடிக்க நமக்கு புத்தியைத் தருபவனும் அவனே ........... பிறகு நோயை அழிப்பவனும் அவனே...
Rate this:
Cancel
T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
17-செப்-202015:40:56 IST Report Abuse
T.B.Sathiyanarayananan A great loss to the Coimbatore poor people. Nice and decent Doctor. He is charging very very less to the poor people, even free. May his sou Rest in Peace.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X