சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதி மீறல்  ரூ.ஒன்றரை லட்சம் வசூல்

Added : செப் 16, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாத தனிநபர், வணிக வளாகங்கள், கடைகளில் இதுவரை ரூ.1 லட்சத்து 35ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மக்கள் பணிபுரியும்இடம், பொதுஇடங்கள், வணிகவளாகங்கள், கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி கட்டாயம் முகக்கவசம் அணிய அரசு உத்தர விட்டுள்ளது.ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறை களை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாத நபர்களிடம் ரூ.200, வணிக வளாகம், கடைகளில் கைகழுவ சோப்பு, சானிடைசர், பணியாளர்கள் முகக்கவசம் அணியாமல் பணிபுரிதல், சமூக இடைவெளியை பின்பற்றாதது என ஒரு கடைக்கு அதிகபட்சமாக ரூ.5ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1 லட்சத்து35 ஆயிரம் வசூலாகியுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X