பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு தோட்டத்தை பராமரிக்கிறீர்களா? புகைப்பட போட்டியில் பங்கேற்கலாம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

உடுமலை:ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, வீட்டுத்தோட்டங்கள் பராமரிப்பவர்களுக்கான புகைப்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தை மேம்படுத்த, செப்., மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில், புதுவிதமாக, ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில், வீட்டுத்தோட்டம் வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:வீட்டுதோட்டம் என்ற பெயரில், ஊட்டச்சத்து புகைப்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வீட்டில் சிறிய அளவிலானாலும், காய்கறி மற்றும் பழ வகைகளை தோட்டமாக அமைத்து பராமரிப்பவர்கள் மற்றும் மாடிதோட்டம் அமைத்துள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. வீட்டுத்தோட்டங்களை புகைப்படம் எடுத்து, poshanphotoudt@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு, போட்டியாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, ஊர் பெயரை குறிப்பிட்டு, அனுப்ப வேண்டும்.புகைப்படங்களை, நாளை (18 ம்தேதி) காலை, 11:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். போட்டியில் பங்கேற்க கூடுதல் விபரங்கள் அறிந்து கொள்ள, அருகிலுள்ள அங்கன்வாடி பணியாளர்களை அணுகலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X