பொது செய்தி

தமிழ்நாடு

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் அரிய வகை மரக்கன்றுகள் நடவு

Added : செப் 16, 2020
Share
Advertisement
 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் அரிய வகை மரக்கன்றுகள் நடவு

உடுமலை:உடுமலை அருகே, மலையடிவார விவசாயப்பண்ணையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், 1,435 மரக்கன்றுகள் நடப்பட்டன.திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. கடந்த, 5 ஆண்டுகளில், 8 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, 'வனத்துக்குள் திருப்பூர்-6' திட்டத்தின் கீழ், 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், விவசாயம் செய்ய முடியாமல், வீணாக உள்ள விவசாய நிலங்களில், விவசாயிகள் விருப்பத்தின் அடிப்படையில், மரக்கன்றுகள் நட்டு தரப்படுகிறது.உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலையடிவாரப்பகுதியில், கல்லாபுரம், குருவக்களம் பகுதியில், விவசாய பண்ணை நிலம் உள்ளது.இங்கு, இலுப்பை, நாட்டு வேம்பு, கடம்பை, வேங்கை, மந்தாரை, நாவல், தேக்கு, கொடுக்காபுளி, மா, கொய்யா என, 1,435 மரக்கன்றுகள் நடப்பட்டன.மரக்கன்றுகள் நடும் நிகழ்வில், நில உரிமையாளர்கள் வித்யா சங்கர், இந்துமதி, மழை உடுமலை, கிழக்கு லயன்ஸ் சங்கம் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினர் பங்கேற்றனர்.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள இங்கு, நில உரிமையாளருக்கு உரிய வருவாய் கிடைக்கும் மரச்சாகுபடி திட்டமாகவும், அரிய வகை பாரம்பரிய மரங்கள், பறவைகள் மற்றும் பல்லுயிரினங்களுக்கு பயன் அளிக்கும் வகையில், விளை நிலம் வனமாக மாற்றும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.மரங்களாக உருவாக்கும் வகையில், நிலத்தில் புதிதாக போர்வெல் மற்றும் சொட்டு நீர் வசதி என தயார் செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் பல ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.இதே போன்று, விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரக்கன்று நட விரும்பினால், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X