சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தெய்வச்சிலைநல்லுாரில் 115 வீடுகள் 12 வீடுகளில் மட்டுமே மக்கள் தங்கல்

Added : செப் 16, 2020
Share
Advertisement

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகிலுள்ள தெய்வச்சிலை நல்லுாரில் 12 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

உத்தரகோசமங்கையில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ளது தெய்வச்சிலை நல்லுார்.இங்கு 5 தெருக்களில் மொத்தம் 115 வீடுகள் உள்ளன.40 ஆண்டு முதல் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்டப்பட்ட பல வீடுகளில் குடியிருப்போர் இல்லாமல் சோகத்தின் நிழலாய் மிடுக்கு குறையாமல் காட்சியளிக்கிறது.அதே கிராமத்தில் வசிக்கும் விவசாயி பூமிநாதன் கூறியதாவது: 1980ம் ஆண்டிற்கு பிறகு, எங்கள் ஊரில் குடியிருந்த 90 சதவீதம் பேர் ராமநாதபுரத்திற்கும் அருகில் உள்ள நகரங்களுக்கும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.வருடத்திற்கு ஒரு முறை கோயில் முளைக்கொட்டு, சிவராத்திரி விசேஷ நாட்களில் வந்து செல்வார்கள். தற்போது வீட்டை யாரும் பராமரிக்காமல் விட்டு சென்றதால் வீடுகள் சிதிலமடைந்து காட்சியளிக்கிறது.

நாங்கள் 12 குடும்பங்கள் மட்டுமே இந்த கிராமத்தை விட்டு செல்லாமல், வசித்து வருகிறோம், டீக்கடை உள்ளிட்ட பிற தேவைகளுக்கு உத்தரகோசமங்கைக்கு சென்று வருகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X