பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஆர்.எஸ்.மங்கலத்திற்கு கூடுதல் பஸ்கள்ஆர்.எஸ்.மங்கலம்: கொரோனா பாதிப்பால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், செப்.7, முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்க அரசு அனுமதி அளித்தது. திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கமாக இயக்கப்பட்ட பஸ்களில் 20 சதவீத பேருந்துகள்கூட முறையாக இயக்கப்படாத நிலை தொடர்வதால், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் போதிய பஸ் இன்றி சிரமமடைந்து வருகின்றனர்.

பல்வேறு கிராம பகுதிகளை ஒன்றிணைத்து இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ்களும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படுவதால்,ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார், உப்பூர், சனவேலி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிப்படைந்துள்ளனர். கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாயிகளுக்கு பயிற்சிமுதுகுளத்துார்: கூடக்குளம் கிராமத்தில் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது. துணை இயக்குனர் கண்ணையன் தலைமை வகித்தார்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈஸ்வரி வரவேற்றார்.பயிற்சியில் மக்காச்சோளம் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. வேளாண்மை அலுவலர் ஓய்வு சந்திரசேகரன் தொழில்நுட்ப பயிற்சி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X