பொது செய்தி

தமிழ்நாடு

ஏழுமலையான் கோவில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை: பக்தர்கள் அனுமதிப்பதில் குழப்பம் நீடிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement
 ஏழுமலையான் கோவில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை: பக்தர்கள் அனுமதிப்பதில் குழப்பம் நீடிப்பு

உடுமலை:உடுமலை ஏழுமலையான்கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமை சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள்அனுமதிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.உடுமலை-யிலிருந்து, மூணாறு செல்லும் ரோட்டில், மேற்கு தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்திலிருந்து, 2,500 மீட்டர் உயரத்தில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும், பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை அனுமதியளித்து வருகிறது.
இக்கோவிலுக்கு மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதைகளில், 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஏழுமலையானை தரிசிப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.சனிக்கிழமைக்கு முன்தினம் இரவு முதலே, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவதையும், அவுல், அரிசி மற்றும் வெல்லம் ஆகியவற்றை படைத்து ஏழுமலையானை தரிசித்து வருவதும் வழக்கமாக உள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இந்தாண்டு, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி உள்ளதா, என்பது குறித்து குழப்பம் நீடித்து வருகிறது.புரட்டாசி முதல் சனிக்கிழமை, வரும், 19ம் தேதி வர உள்ள நிலையில், பக்தர்கள் அனுமதிப்பது மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து எந்த விதமாக அறிவிப்பும் இல்லாமல், குழப்பம் நீடித்து வருகிறது.
புரட்டாசி மாதம் துவங்கினால், மலையடிவார பகுதிகளில், கடைகள், வழிபாட்டுக்கு செல்லும் மக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், மலைமேல் கோவில் வளாகத்தில், வரிசை தடுப்புகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்படும்.ஆனால், இந்தாண்டு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், இதுவரை ஏற்பாடுகள் செய்யவில்லை.
கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வனப்பகுதியில் அமைந்துள்ள கோவில்களுக்கு பக்தர்கள் அனுமதிப்பது குறித்து, துறை ரீதியான உத்தரவுகள் வரவில்லை. உயர் அதிகாரிகள் அறிவுறுத்தல் அடிப்படையில் அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும். வழக்கம் போல், பூஜைகள் மேற்கொள்ள பூசாரிகள், ஊழியர்கள் சென்று வருவதில் சிக்கல் இல்லை' என்றனர்.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' ஏழுமலையான் கோவில் பக்தர்கள் தரிசனம் குறித்து, ஆலோசித்து வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X