பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு அரவை: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் நிர்வாகக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்த ஆலையில், 2019 -- 20 ஆம் ஆண்டுக்கான நடவு பருவம் கடந்த ஏப்.,ல் துவங்கப்பட்டு, நடவு மற்றும் மறுதாம்பு கரும்புகள் பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், 2020 -- 21 ஆண்டு அரவைக்கு, கரும்பு விவசாயிகளிடமிருந்து, ஆறாயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்து இரண்டு லட்சத்து 15 ஆயிரம் டன்கள் அரவை செய்திட சர்க்கரைத்துறை ஆணையரால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் இறுதி வரை, 1,500 ஏக்கர் மட்டுமே பதிவாகி உள்ளது. ஆலையின் நடவு பருவம் அக்., 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், பதிவு செய்யாத அங்கத்தினர்கள், தங்களது கரும்புகளை சம்பந்தப்பட்ட கோட்ட கரும்பு அலுவலர் அல்லது கோட்ட கரும்பு அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். ஆலையின் அரவைத்திறன் முழு கொள்ளளவு இலக்கை எட்டிட கரும்பு விவசாயிகள் உதவிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதோடு நடவிற்கு குறைந்த வயதுள்ள புதிய ரக நாற்றங்கால் விதை கரும்பு தயாராக உள்ளது. இதனுடன் தமிழக அரசின் சிறப்புத்திட்டங்களான சொட்டு நீர்ப்பாசனம், தேசிய, வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பரிசுகள், நாற்றங்கால் புதிய ரகங்களின் மரபு விதை, சோகை பரப்புதல், ஊடுபயிர் செய்தல், இனக்கவர்ச்சிப்பொறிகள் ஆகியவற்றிற்கு ஆலை மூலம் மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X