பொது செய்தி

தமிழ்நாடு

கடைமடை விவசாயிகள் கண்ணீர்: நீர் வினியோகம் உறுதி செய்ய மனு

Added : செப் 16, 2020
Share
Advertisement
 கடைமடை விவசாயிகள் கண்ணீர்: நீர் வினியோகம் உறுதி செய்ய மனு

பொள்ளாச்சி:வெள்ளகோவில் கிளை கால்வாய்க்கு உரிய வகையில், தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பி.ஏ.பி., அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்சன் மற்றும் விவசாயிகள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் கோபியிடம் மனு கொடுத்தனர். விவசாயிகள் கூறியதாவது:பி.ஏ.பி., திட்டத்தில் இரண்டாம் மண்டலத்தில், பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. வெள்ளகோவில் கிளை கால்வாயில், பயிர் சாகுபடிக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.தற்போது ஒரு சுற்றுக்கு இரண்டு நாட்கள் மட்டும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. நீர் திருட்டு போன்ற பல்வேறு காரணங்களால், பாசனத்துக்கு முறையாக தண்ணீர் கிடைப்பதில்லை.பரம்பிக்குளம் அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே, காண்டூர் கால்வாயில், 1,150 கனஅடி தண்ணீர் எடுத்து பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு ஏழு நாட்கள் பாசனம், ஏழு நாட்கள் அடைப்பு, 14 நாட்களுக்கு ஒரு சுற்று என, தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், தண்ணீர் திருட்டை கட்டுப்படுத்தி, கடைமடை வரையிலும் தண்ணீர் வினியோகம் செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X