பொது செய்தி

இந்தியா

கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்!

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா சூழலில் உள்நாட்டு தேவைகளை முக்கியத்துவம் அளித்து கவச உடைகள், சானிடைசர்களுக்கான ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.latest tamil newsமக்களவையில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‛முகக்கவசங்கள், ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்துகள், 13 பிற மருந்து மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல மருத்துவ பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது என்றார். சானிடைசர்கள், சுவாசக் கருவிகள் போன்றவற்றுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக் கருவிகள், என்.95 முகக்கவசங்களை மாதாந்திர ஒதுக்கீடு அளவு மட்டும் ஏற்றுமதி செய்யலாம் என்றார். கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் மேற்கூறிய மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய ஏப்ரல் மாதத்தில் தடை விதிக்கப்பட்டது'.


latest tamil news‛உள்நாட்டுத் தேவை, உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதிக்கான உபரி பொருட்கள் கிடைப்பது குறித்து அவ்வப்போது மதிப்பீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன.மார்ச் மாதம் கவச உடைகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மாதத்திற்கு 1.5 கோடி கவச உடைகள் உள்நாட்டில் உற்பத்தியாகின்றன. அதே போல் ஆண்டுக்கு 10 லட்சம் லிட்டராக இருந்த ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் உற்பத்தி, தற்போது நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. இதனால் தடை நீக்கப்பட்டுள்ளது' என அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-202012:52:26 IST Report Abuse
ஆப்பு இப்போ வெங்காய ஏற்றுமதிக்குத்தான் தடை....
Rate this:
Cancel
ARUL -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202007:51:12 IST Report Abuse
ARUL If locked down you are saying why lockdown required we need to live open up the economy and if lockdown released you are telling why its relaxed Corona cases increasing. Then what is your expectation.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
17-செப்-202000:40:45 IST Report Abuse
தல புராணம் இந்தியாவில் 50 லட்சத்தை கடந்த தொற்றின் வீச்சு.. கடைசி 10 லட்சம் தொற்றுக்கள் வெறும் 9 நாட்களில் கூடியுள்ளது என்பது உலக சாதனை.. அடுத்த 10 லட்சம் 7 நாட்களில் கூடும் கொடுமை.. இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக இருக்கும் என்று மற்ற உலகநாடுகள் கவலையில் இருக்கின்றன.. இங்கே பீகார் தேர்தலில் கவனம் செலுத்தப்படுகிறது..அக்டோபர் 2 க்குள் அமெரிக்காவை தாண்டி 70 லட்சம் தொற்றுகள், 1,50,000 சாவுகள் என்று கொசுக்களை போல செத்து மடியப்போகிறார்கள்.. கொள்ளிக்கட்டையை ஏற்றி மேலே படுக்க சொல்லுவானுங்க இந்த மூடர்கூட தலைவர்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X