ராமநாதபுரம : ராமேஸ்வரம், திருப்புல்லாணி அருகே சேதுக்கரை, தேவிப்பட்டினம் நவபாஷாணம்,மாரியூர் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடலில் இன்று(செப்.17) மகாளய அமாவாசையில் பக்தர்கள் நீராடவும், முன்னோருக்கு திதி, தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகமாவட்ட எஸ்.பி., கார்த்திக் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும், ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாலும் பொதுமக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் இன்று கடற்கரைக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE