பீஜிங்:சீனாவின் ஷென்சென் நகரில் சென்குவா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. அண்மையில் இந்திய ஜனாதிபதி, பிரதமர், சோனியா குடும்பம், பல எம்.பி.,க்கள், முன்னாள், இந்நாள் முதல்வர்கள் உள்ளிட்ட பலரை இந்த நிறுவனம் வேவு பார்த்த தகவல் வெளிவந்தது.
சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் வெளியிடும் பதிவுகள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், அவர்களின் கருத்து என இந்த நிறுவனம் பல தகவல்களை சேகரித்து வைத்துள்ளது. எவ்வளவு நேரம் யாருடன் தொடர்பில் இருந்தனர், இவர்களின் பதிவுகளை வேறு நபர்களுக்கு அனுப்பியவர்கள் எத்தனை பேர், இணையத்தில் அவர் என்ன தேடுகிறார், அதன் காரணம் என்ன என்பது பதிவு செய்யப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நபர் எங்கெங்கு செல்கிறார் என்பதை அவரது அலைபேசியின் ஜி.பி.எஸ்., மூலம் பதிவு செய்கின்றனர்.
சுருக்கமாக சொல்வதென்றால் வி.ஐ.பி.,க்களின் ரகசியங்கள் அனைத்தும் அந்த நிறுவனத்தின் கையில் உள்ளது.அமெரிக்காவில் முன்னாள் அதிபர்கள் அலைபேசிகளை பயன்படுத்த அனுமதி கிடையாது.
காரணம் அவர்கள் வேவு பார்க்கப்படலாம் என்பதே. அதே போன்று வடகொரிய அதிபர் கிம் வெளிநாடுகளுக்கு சென்றால் அவருடன் தனியாக கழிப்பறையும் செல்லும். அவரது மலத்தில் இருந்து என்ன நோய் இருக்கிறது என வெளிநாடு கண்டுபிடித்து விடுமாம். அதற்காக அந்த சிறப்பு கழிப்பறை. பொதுவாக தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் ரகசியங்களை பாதுகாப்பது முடியாதது எனினும் சீன நிறுவனத்தின் இந்த செயல் உலகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE