ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஊடுருவல் பார்லி.,யில் மத்திய உள்துறை தகவல்

Added : செப் 16, 2020
Share
Advertisement

புதுடில்லி:''தென் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிலர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது,'' என, ராஜ்யசபாவில், உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் இது பற்றி அவர் கூறியதாவது:ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, தன் கொள்கைகளை பரப்ப, சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறது. இதை, சைபர் பிரிவு அதிகாரிகள், மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கவலை தரக்கூடிய சம்பவங்கள் நடந்தால், சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், தென் மாநிலங்கள் உட்பட, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிலர் சேர்ந்துள்ளதாக, மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன.

தமிழகம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தொடர்பாக, 17 வழக்குகளை பதிவு செய்துள்ள, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, 122 பேரை கைது செய்துள்ளது.

மேலும், என்.ஐ.ஏ., விசாரணையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் செயல்பாடு கள் அதிகம் உள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஹுரியத்துக்கு மாற்றாக, 'பிளீடிங் ஹார்ட்'ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்பே, பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் பற்றி, என்.ஐ.ஏ., தீவிரமாக விசாரணை நடத்தி, பயங்கரவாதிகள் பலரை கைது செய்துள்ளது. இதில், துணை ராணுவ படையில், டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய தேவேந்தர் சிங், ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாதிகள் இர்பான் ஷபி மிர், சையத் நவீன் முஷ்டாக் , ரபி அகமது ஆகியோரை, என்.ஐ.ஏ., கடந்த ஜனவரியில் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது, ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளதாவது:பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,தான், ஹுரியத் மாநாடு பிரிவினைவாத அமைப்பை உருவாக்கியது. பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு, நிதி வரும் வழிகளை, என்.ஐ.ஏ., அடைத்துவிட்டது. இதனால், பணமில்லாமல், பிரிவினைவாத அமைப்புகள், காஷ்மீரில் நெருக்கடியில் உள்ளன. பிரிவினை மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் ஏஜென்டாக செயல்பட்ட இர்பான் ஷமி மிர், பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்று, ஐ.எஸ்.ஐ., அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

கடந்த ஆண்டு கடைசியில், பாகிஸ்தானுக்கு சென்ற மிர், ஐ.எஸ்.ஐ., அதிகாரிகளிடம், 'நிதி நெருக்கடியால், ஹுரியத் மாநாடு முடங்கிவிட்டது. இனி, அந்த அமைப்பால் செயல்பட முடியாது' என தெரிவித்துள்ளார்.இதையடுத்து, ஹுரியத் மாநாட்டுக்கு பதில், 'பிளீடிங் ஹார்ட்' என்ற பெயரில் புதிய அமைப்பு துவக்க, ஐ.எஸ்.ஐ., ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கு பணம் அனுப்ப, புதிய வழிகள் பற்றியும், மிர், ஐ.எஸ்.ஐ.,யுடன் ஆலோசித்துள்ளார்.இவ்வாறு, அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X