அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்புக்கு ரூ.9,027 கோடி ஒதுக்கீடு: ஓ.பி.எஸ்.,

Updated : செப் 18, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
OPS, TN Assembly, சட்டசபை, துணை முதல்வர், பன்னீர்செல்வம், ரூ12845 கோடி,  துணை பட்ஜெட், கொரோனா தடுப்பு,  ரூ9027 கோடி

சென்னை : சட்டசபையில், 12 ஆயிரத்து, 845 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வகை செய்யும், துணை பட்ஜெட்டை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.


துணை பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:


* கொரோனா கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, 9,027.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* கொரோனா நோய் தொற்று காலத்தில், உணவு பொருட்களை இலவசமாக வழங்க, கூடுதலாக, 3,359.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* தொற்று நிவாரண உதவியாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கும், ரொக்கப் பண உதவியை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க, 3,169 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 1,050 கோடி ரூபாய், இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பின் கீழ் தரப்பட்டுள்ளது

* கொரோனா தொற்று மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள் கொள்முதலுக்காக, உள் நோயாளிகள் உணவு செலவினங்களுக்காக, ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதிகள் ஏற்படுத்த, சுகாதாரத் துறைக்கு, 1,109.42 கோடி ரூபாய், கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

* மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு, 14வது மத்திய நிதி ஆணையத்தின், இரண்டாம் தவணை, பொது அடிப்படை மானியம் வழங்க, 988 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* தனியார் கரும்பு உற்பத்தி ஆலைகள், விவசாயிகளுக்கு நிலுவை தொகைகளை வழங்க வசதியாக, மின் உற்பத்திக்கான நிலுவைத் தொகையை, மின் வாரியத்திற்கு வழங்க, முன்பணமாக, 170.28 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

* தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்த, வேளாண் துறைக்கு, 107.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசின் மானியமாக, 317 கோடி ரூபாய்க்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* தேனி மாவட்டம், வீரபாண்டி கிராமம்; திருப்பூர் மாவட்டம், பண்ணை கிணறு கிராமத்தில், கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க, 83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பத்துார், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களில், கலெக்டர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் கட்ட, 645.26 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

* அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, 581 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுஉள்ளது.

* புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு, கூடுதல் மூலதன மானியமாக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
17-செப்-202011:13:38 IST Report Abuse
RajanRajan பொதுமக்களின் கனிவான பார்வைக்கு நேற்றைய சட்ட மன்றத்தில் மாண்புமிகு துணைமுதல்வரின் பேச்சு இன்று பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. அரசுப் பணியாளர்கள்- ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில்தான் கொரனா தடுப்பு பணி செலவுகளை மாநில அரசு செய்திருப்பது தெரிய வருகிறது. அரசு கொரனா தடுப்புக்கென்று எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 தவணை அகவிலைப்படிகள் நிறுத்தப்பட்டதால் ரூ.4,947.23 கோடியும், ஈட்டிய விடுப்பு பணப்பயன் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதால் ரூ.2,448.82 கோடியும் மிச்சமாகிறது. ஆக மொத்தம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களிடம் இருந்து பெறப்படும் தொகை ரூ.7,396.05 கோடியாகும். கொரானா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு தமிழக அரசு செலவிட்டுள்ள தொகை ரூ.7,168 /- கோடியாகும். இது தவிர அரசு ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தையும் கொரானா தடுப்பு நிதியாக வழங்கியுள்ளனர். ஆக அரசு ஊழியர்களிடம் பெறப்படும் நிதியிலேயே கொரானா செலவினம் போக ரூ.350 கோடி மிச்சப் படுகிறது. வெல்லத்தில் பிள்ளையார் செய்து, அதிலிருந்து கொஞ்சம் கிள்ளி பிள்ளையாருக்கே நைவேத்தியம் செய்வதென்பது இதுதான்.
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
17-செப்-202014:06:51 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்ஆமாம் ஒருத்தன் GST யில் நிதி இல்லை என்கிறான் வெட்கமே இல்லாமல் அதுவும் அவன் ஒன்னும் இலவசம் இல்லை எங்களுடைய SGST உனக்கு எங்க புரிய போகுது அப்புறம் என்ன பேச்சு...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-செப்-202007:30:12 IST Report Abuse
Mani . V எது அந்த தகரத்தை வைத்து அடைப்பதற்கா? உலகத்திலேயே தன் மக்களின் சாவில் கூட கொள்ளையடிக்கும் ஒரே கோஷ்டி இதுதான். அது எப்டின்னுன்னே தெரியலை? ஒரு நாளைக்குள் இவ்வளவு செலவு கணக்கு. (நேற்று 7167 கோடி, இன்று 9027 கோடி)
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
17-செப்-202017:40:00 IST Report Abuse
Srinivasஆளும் வர்க்கம் இல்லாமல் இது நடக்க வாய்ப்பில்லை....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
17-செப்-202001:02:35 IST Report Abuse
தல புராணம் அட்றா சக்கை.. நேத்து ஏழாயிரம் கோடின்னு இருந்திச்சி, இன்னிக்கி 9000 கோடி ஆயிடிச்சு.. விவசாயிகள் பணம் கொள்ளை, இது, அப்புறம் எதை தான் விட்டு வெச்சீங்க??
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
17-செப்-202013:52:39 IST Report Abuse
Srinivas///அப்புறம் எதை தான் விட்டு வெச்சீங்க??/// எதையுமே விட்டுவைக்காத அரசுதான் இது. இன்னும் சில மாதங்களே....அதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும்.....அடித்து துவைத்து.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X