பொது செய்தி

தமிழ்நாடு

வாரியத்தில் வாரிசு வேலைக்கு

Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:கருணை அடிப்படையில், வாரிசு வேலைக்கு விண்ணப்பிப்போர், தமிழ் வழிக் கல்வி படித்துள்ளனரா என்பதை உறுதி செய்யும் படி, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக மின் வாரியத்தில், கள உதவியாளர், பொறியாளர் என, 85 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். பணி காலத்தில் உயிரிழக்கும் ஊழியர்கள், அதிகாரிகளின் வாரிசுதாரருக்கு, கருணை அடிப்படையில், கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப்படுகிறது.மின் வாரியத்தில் வேலைக்கு சேருவோர், 10ம் வகுப்பு, பிளஸ் 2 என, ஏதேனும் ஒன்றில், ஒரு பாடமாக, தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது, கருணை அடிப்படையிலான வாரிசு வேலைக்கும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதி உடைய பதவிகளுக்கு, விண்ணப்பதாரர், தமிழை ஒரு பாடமாக படித்து, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு குறைவான தகுதி உடைய பதவிகளுக்கு, தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் அல்லது தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

வரும் காலங்களில், கருணை அடிப்படையில், வாரிசு வேலை கோரி பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, விண்ணப்பதாரரின் கல்வி தகுதி சான்றிதழில், தமிழ் மொழி தேர்ச்சி, தமிழ் வழிக் கல்வி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.அதுபற்றிய விபரத்தை தலைமை அலுவலகத்திற்கு அனுப்புமாறு, மண்டல தலைமை மற்றும் மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-202013:25:34 IST Report Abuse
Bhaskaran இனி மின்சாரம் தொடர்பான அணைத்து வார்த்தைகளும் தமிழிலேயே பேசணும்னு ஆணை வரலாம் .கேபிள் கம்பிவடம் பீஸ். இளக்கி Screw டிரைவர் திருப்புளி டெஸ்டர். மின்காட்டி அப்படீன்னுட்டு
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
17-செப்-202007:27:58 IST Report Abuse
natarajan s இப்படிதான் முன்னாள் முதல்வர் கருணாநிதி செம்மொழி மாநாடு முடிந்ததும், தமிழில் கல்வி கற்றவருக்கு தமிழ் நாட்டில் வேலையில் முன்னுரிமை என்று ஒருத்தரை கூப்பிட்டு வேலை வேலை கொடுத்தார், அவர் 8 வது வரை தமிழ் கல்வி கற்றவர், அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை தமிழ் வளர்ச்சி துறையில் XEROX இல் நகல் எடுக்கும் வேலை. இதுக்கு தமிழ் தெரிந்தால் என்ன பிரெஞ்சு தெரிந்தால் என்ன இப்படித்தான் இவர்கள் தமிழ் , தமிழர்களை மீட்டு எடுத்தார்கள்.இதற்கு பெரிய விளம்பரம் எல்லாம் கொடுக்கப்பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X