பொது செய்தி

தமிழ்நாடு

பூங்காக்களை திறக்க ஏங்கும் குழந்தைகள்: பாதுகாப்பு வழிமுறை பின்பற்றினால் பயமில்லை

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டதால், கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள, அனைத்து விதமான பூங்காக்களையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, திறக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.வைரஸ் நோய் பரவல் காரணமாக, ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில், பொதுமக்கள் அதிகமாக திரளும் கோவில்கள், ஜிம், பூங்காக்கள், ஷாப்பிங் மால், தியேட்டர்கள் மூடப்பட்டன.தற்போது, தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.ஷாப்பிங் மால், கோவில், ஜிம் திறக்கப்பட்டு விட்டன. பூங்காக்களை திறக்கலாம் என, மத்திய - மாநில அரசுகள் கூறியிருந்தாலும், வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வரவில்லை என கூறி, கோவை மாநகராட்சி நிர்வாகம் திறக்காமல் இருக்கிறது.வ.உ.சி., பூங்காவை சுற்றிப்பார்க்க, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வர்; மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். காந்திபார்க்கில், அப்பகுதியை சேர்ந்தவர்கள், நடைபயிற்சி மேற்கொள்வர்; மாலை நேரங்களில், ஏராளமான குழந்தைகள் விளையாடுவர்.கடந்த மார்ச் முதல், குழந்தைகள் வெளியே செல்ல முடியாமல், வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பூங்காவை மீண்டும் திறந்தால், விளையாடுவதற்கு அழைத்துச் செல்லலாம் என பெற்றோர் நினைக்கின்றனர்.இதேபோல், மாநகராட்சி முழுவதும் அந்தந்த வார்டுகளில் உள்ள பூங்காக்களை, உடனடியாக சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X