பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலைத்துறையின் ஆயிரம் ரூபாய் மானியம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

அன்னுார்:காய்கறி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.அன்னுார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மதுபாலா கூறியுள்ளதாவது:தக்காளி, கத்திரி, வெண்டை, மிளகாய், வெங்காயம், கீரை, முருங்கை, சவ்சவ், காலிபிளவர், பீட்ரூட், கொத்தவரை, வெள்ளரி மற்றும் பந்தல் காய்கறி சாகுபடி செய்யும், அன்னுார் வட்டார விவசாயிகளை ஊக்குவிக்க, தேசிய தோட்டக்கலை இயக்கத்தில், ஒரு ஏக்கருக்கு, ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு, ஐந்து ஏக்கருக்கு மானியம் தரப்படும்.இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், காய்கறி விதை அல்லது நாற்று வாங்கியதற்கான ரசீது, வங்கி கணக்கு நகல் ஆகியவற்றுடன், ஒன்றிய தோட்டக்கலை அலுவலகத்தில் பதிவு செய்து, பயன் பெறலாம்.விவரங்களுக்கு, 97919 98833, 95784 52676, 99433 66422 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, மதுபாலா கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X