பொது செய்தி

தமிழ்நாடு

பழைய லேண்ட்லைன் எண்ணில் பைபர் இன்டர்நெட் இணைப்பு

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பழைய லேண்ட்லைன் எண்ணில் பைபர் இன்டர்நெட் இணைப்பு

சென்னை:'லேண்ட்லைன்' போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அதே எண்ணில், பைபர் இன்டர்நெட் இணைப்பு பெற்றுக் கொள்ளும் வசதியை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தி உள்ளது.

பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., தனியாருக்கு இணையான சேவை வழங்கி வருகிறது. இதில், லேண்ட்லைன் போன் இணைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம். இவர்கள், பைபர் இன்டர்நெட் இணைப்பு பெற வேண்டுமெனில், பழைய போன் இணைப்பை ஒப்படைத்து விட்டு, புதிதாக இணைப்பு பெற வேண்டும். இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தன.

இந்நிலையில், பழைய லேண்ட்லைன் போன் எண்ணிலேயே, பைபர் இன்டர்நெட் சேவையை பெற்றுக்கொள்ளும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்.,லில் பைபர் இன்டர்நெட் சேவை, தனியார் நிறுவனங்களை விட, குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.புதிதாக பைபர் இன்டர்நெட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு, புதிய இணைப்பு எண் வழங்கப்படும். அதில், லேண்ட்லைன் சேவையும் கிடைக்கும்.

ஏற்கனவே லேண்ட்லைன் இணைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அதை ஒப்படைத்து விட்டு, புதிதாக பைபர் இன்டர்நெட் இணைப்பை பெற தேவையில்லை.தற்போதைய, பழைய லேண்ட்லைன் எண்ணிலேயே, பைபர் இன்டர்நெட் இணைப்பு பெறலாம். இதனால், ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் தவிர்க்கப்படும். இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-202012:31:19 IST Report Abuse
Bhaskaran வேகமே இல்லாத நெட் இணைப்பு இருந்து என்ன பயன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X