அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமைக்கு 1௦ ஆண்டு சிறை தண்டனை

Updated : செப் 18, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
வரதட்சணை கொடுமை, 1௦ ஆண்டு சிறை தண்டனை

சென்னை : ''பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்கிட மத்திய அரசின் அனுமதி பெற்று சட்ட திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்'' என முதல்வர் பழனிசாமி நேற்று சட்டசபையில் அறிவித்தார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய 1860ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்க மத்திய அரசின் அனுமதியுடன் சட்ட திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
* 'பிரிவு - 304 பி'யில் வரதட்சணை கொடுமை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் ஏழு ஆண்டு சிறை தண்டனை ௧௦ ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
* 'பிரிவு - 354 -பி' குற்ற நோக்கத்துடன் பெண்களின் ஆடைகளை களைவதற்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை ஐந்து ஆண்டுகளாக் கப்படும். அதிகபட்சமாக வழங்கப்படும் ஏழு ஆண்டு சிறை தண்டனை ௧௦ ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

* 'பிரிவு - 354 - டி'யில் தவறான குற்ற நோக்கத்துடன் பின் தொடர்ந்தால் இரண்டாம் முறையும் தொடர்ந்து குற்றமிழைத்தால் தற்போது வழங்கப்படும் ஐந்தாண்டு சிறை தண்டனை அதிகபட்மாக ஏழு ஆண்டுகளாக்க உயர்த்தப்படும்.
* 'பிரிவு - 372'ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதிற்குட்பட்ட நபர்களை விற்பனை செய்தல்; பிரிவு -- 373ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதிற்கு உட்பட்ட நபர்களை விலைக்கு .வாங்குதலுக்கு தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு அதிகபட்ச சிறை தண்டனையை குறைந்தபட்சம் ஏழு ஆண்டு சிறை தண்டனை அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.ஜெ. அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்றென்றும் அரணாக தொடர்ந்து நின்று அவர்களை காக்கும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-202013:27:23 IST Report Abuse
Bhaskaran விவகாரத்து வழக்குகளை சீக்கிரமாக பைசல் செய்து கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தரணும்னு சட்டம் இயற்றுங்க எசமான்
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
17-செப்-202011:47:02 IST Report Abuse
Nallavan Nallavan வரதட்சணை என்னும் குற்றம் ஒருபுறம் இருக்கட்டும் ......... மற்ற தூக்குத் தண்டனைக்கு ஏற்ற குற்றங்களுக்கு கூட சிறைத்தண்டனையை அதிகரிப்பதால் ஒரு பயனும் இல்லை .......... உதாரணத்துக்கு சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளும் பெருங்குற்றம் ..........
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
17-செப்-202013:34:17 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்NEET தேர்வு ஆரம்பிக்க முடிவு எடுத்த வருடம் 2012 BY CBSC & MEDICAL COUNCIL OF INDIA :: தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் ஆகவே நாம் MEDICAL COUNCIL OF இந்தியா வில் இருந்து விலகி TAMIL NADU MEDICAL COUNCIL என்று ஒன்றை தொடங்கி நம் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் அனைத்தும் அதன் கீழ் கொண்டுவந்து +2 மார்க் வைத்து தேர்வு செய்யணும் அப்போ தான் அவர்கள் அடங்குவார்கள்...
Rate this:
17-செப்-202013:35:30 IST Report Abuse
அண்ணா.வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் உண்மை மேற்குவங்காளம் DHNBAD இல் இது எல்லாம் சகஜம் தான் நீ முதலில் உங்கள் சேச்சி இடம் சொல்லி இதேமாதிரி சட்டம் அங்கும் இயற்ற சொல்லு...
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
17-செப்-202010:12:27 IST Report Abuse
Balasubramanian Ramanathan இந்த குற்றவாளிகளின் சாதி மத வாரி விவரங்களை அரசு வெளியிடுமா. இதுவும் மூத்த குடிகளின் பண்பாட்டில் உள்ள நடைமுறையா எனவும் தெளிவு படுத்த வேண்டும்.
Rate this:
17-செப்-202013:40:31 IST Report Abuse
அண்ணா.வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் இதை UP யில் இருந்து செய்யலாமே ஏன் ஈனில் உங்கள் MP ஒருத்தர் இது விஷயம் தான் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X