அழுகும் பன்னீர் திராட்சை: கண்ணீர் சிந்தும் விவசாயிகள்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 அழுகும் பன்னீர் திராட்சை: கண்ணீர் சிந்தும் விவசாயிகள்

பேரூர்:தொடர் மழையால் பன்னீர் திராட்சை பழங்கள் அழுகி வருவதாலும், விலை இல்லாததாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் தீத்திபாளையம், காளம்பாளையம், மாதம்பட்டி, குப்பனுார் உள்ளிட்ட பகுதிகளில், பன்னீர் திராட்சை சாகுபடியாகிறது. கடந்த சீசனில் சாகுபடி செய்த தோட்டங்களில், அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, பழங்களில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. அதனால் பழங்கள் அழுகி வருகிறது. குளிர்ந்த சீதோஷ்ண நிலையால், விற்பனையின்றி விலையும் சரிந்துள்ளது. திராட்சை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.திராட்சை விவசாயி பழனிசாமி, ''இடைவிடாத மழையால், பழங்கள் அழுகி வருகின்றன. மீதமுள்ள பழங்களை பறவைகளிடம் இருந்து காப்பாற்ற, போராட வேண்டியுள்ளது. ஒன்றும் மிஞ்சாமல் போவதற்கு, கிடைப்பது கிடைக்கட்டும் என்பதற்காக, விலை நிர்ணயம் செய்யாமலேயே விற்று வருகிறோம். பிப்., மாதத்தில் ஊரடங்கால், பழங்கள் பறிக்காமல் வீணாகியது.நடப்பாண்டு எப்போதும் இல்லாத வகையில், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது,'' என, வேதனையுடன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X