சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர், கைது செய்யப்பட்டனர்.மேட்டுப்பாளையம் வனச்சரகம், நெல்லி மலை காப்புக்காடு குரும்பனுார் பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருவர் சாக்குப்பையை சுருட்டி வைத்துக் கொண்டு, வனப்பகுதி அருகில் உள்ள பாதையில் நடந்து சென்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது, தப்பி ஓடினர். இருவரையும் துரத்திப் பிடித்து, சாக்குப்பையை சோதனையிட்டபோது, 7 கிலோ காட்டு பன்றி இறைச்சியை, பாலிதீன் பேப்பரில் சுற்றி வைத்திருந்தது தெரியவந்தது. இரண்டு கத்திகள் ரத்தக்கறையுடன் இருந்தன.இது தொடர்பாக, தேக்கம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் சேர்ந்த சந்திரசேகர், 20, அய்யாசாமி, 30. இருவரையும் வனத்துறையினர், கைது செய்து விசாரணை நடத்தினர்.இதில், அவர்கள் நெல்லிமலை வனப்பகுதியில், திருட்டுத்தனமாக நுழைந்து வாகனத்தின் பிரேக் கம்பியால், சுருக்கு வைத்து அதில் சிக்கிய காட்டுப்பன்றியை வெட்டி, இறைச்சிக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது.இருவர் மீதும், வன உயிரின குற்றவழக்கு பதிவு செய்து, தலா பத்தாயிரம் வீதம், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X