பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு திட்டத்தில் 12 நீர்நிலைகள் : அதிகாரி தகவலால் மகிழ்ச்சி

Added : செப் 16, 2020
Share
Advertisement

அன்னுார்:கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1,044 குளம் குட்டைகளில், ஆண்டுக்கு, 1.5 டி.எம்.சி., நீர் நிரப்பும், 1,652 கோடி ரூபாயிலான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில், விடுபட்ட நீர்நிலைகளை சேர்க்க, ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து, அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர் செல்வராஜ் பொதுப்பணித்துறைக்கு அனுப்பிய மனுவில், 'அன்னுார், சூலுார், எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களைச் சேர்ந்த, காளப்பட்டி, பச்சாபாளையம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், அரசூர், சோளக் காட்டுபாளையம், நாரணாபுரம், கணபதிபாளையம், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட, 12 நீர்நிலைகளை அத்திக்கடவு திட்டம் 2ல் சேர்க்க வேண்டும்' என கோரியிருந்தார்.இதற்கு ஈரோடு, பொதுப்பணித்துறை, திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட செயற்பொறியாளர் விஜயா அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், 'அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் இரண்டுக்கான, முதல் நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. இதற்கு விரிவான ஆய்வு மேற்கொள்ளும்போது, நீர் இருப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் இருப்பின், மனுவில் குறிப்பிட்டுள்ள, 12 நீர்நிலைகளை திட்டம்-2ல் சேர்த்துக் கொள்ள ஆவன செய்யப்படும்' என, தெரிவித்துள்ளார்.ஆர்வலர் செல்வராஜ் கூறுகையில், "பொதுப்பணித்துறையின் பதில் மகிழ்ச்சி தருகிறது. விடுபட்ட ஊராட்சிகளில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X