கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஏலத்தில் நிதி நிறுவன சொத்து : கோர்ட் உத்தரவால் நடவடிக்கை

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:நிதி நிறுவனத்தின், 20 ஏக்கர் நிலத்தை ஏலமிட, கோர்ட் உத்தரவிட்டதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.கோவையில் செயல்பட்டு வந்த சுந்தரம் பைனான்ஸ் நிறுவன குழுமம், 15.2 கோடி ரூபாய் மோசடி செய்தததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வருகிறது. நிதி நிறுவனம் நடத்திய சுந்தரம்,75, மனைவி கயல்விழி,70, ஆகியோர் ஜாமினில் உள்ளனர்.15 ஆண்டுக்கு மேலாகியும், வழக்கு விசாரணை முடியாமல் இழுத்தடிக்கப்படுவதால், நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்கள், பணத்தை திரும்ப பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.2006ல் வழக்கு பதிவான போது, நிதி நிறுவனத்துக்கு சொந்தமான செட்டிபாளையம் பகுதியிலுள்ள 20 ஏக்கர் நிலம், நீதிமன்றத்தால் இடை முடக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு, நிதி நிறுவனத்தினர், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்றனர்.அந்த சொத்துக்களை மீட்டு, பொது ஏலத்தில் விட்டு, பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்களுக்கு பிரித்து கொடுக்க கோரி, டான்பிட் கோர்ட்டில், அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.விசாரித்த நீதிபதி ரவி, 20 ஏக்கர் நிலத்தை மீண்டும் ஜப்தி செய்து ஏலத்தில் விட, மாவட்ட வருவாய் துறைக்கு உத்தரவிட்டார்.அதன் பேரில், நிதி நிறுவன சொத்துக்கள் ஏலம் குறித்து அரசு, கெஜட்டில் வெளியிட்டு ஏலமிடுவதற்கு, கோவை மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X