பொது செய்தி

தமிழ்நாடு

புத்தக படிப்பை ஊக்குவிக்க கிலோ நூறுக்கு புத்தகம் விற்பனை

Added : செப் 16, 2020
Share
Advertisement

சிவகங்கை : இளம் தலைமுறையினர் புத்தகம் படிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக பழைய புத்தக கண்காட்சியில் ஒரு கிலோ புத்தகம் நுாறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சிவகங்கை காளவாசல் பகுதியில் தமிழ்குடியோன் புத்தகக் கடை உள்ளது. இங்கு பழைய புத்தகங்கள் விற்கப்படுகிறது.தற்போது மாதந்தோறும் ஒரு நாள் மட்டும் பழைய புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆன்மிகம், தலைவர்கள் வரலாறு, அறிவியல் அறிஞர்கள் வாழ்க்கை வரலாறு, சிறு குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள், டிக்ஸ்னரி உட்பட அனைத்து பழைய புத்தகங்களும் கிலோ நுாறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

முருகன், புத்தகக்கடை உரிமையாளர் கூறியதாவது: புத்தகத்தை படிப்பதில் இளம் தலைமுறையினர் ஈடுபடுவதில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன்களில் அக்கறை எடுத்து இது போன்ற குறைந்த விலையில் எடைக்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களை வாங்கி குழந்தைகளுக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும், என்பதற்காக மாதம் தோறும் ஒரு நாள் கண்காட்சி நடத்தப்பட்டு எடைக்கு புத்தக விற்பனை செய்து வருகிறேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X