பொது செய்தி

தமிழ்நாடு

பழுதான மீட்டர் மாற்ற நுகர்வோருக்கு அனுமதி

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:பழுதான மீட்டரை மாற்ற விரும்புவோர், மின் வாரியத்திடம் இருப்பு இல்லாத பட்சத்தில், உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழக மின் வாரியம், வீடு உள்ளிட்ட இணைப்புகளில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர் பொருத்தியுள்ளது.புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, 'மீட்டர் இல்லை' என்ற காரணத்தால், பிரிவு அலுவலக ஊழியர்கள் தாமதம் செய்கின்றனர்.இதை தடுக்க, மின் இணைப்பு கேட்போர், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, நேரடியாக மீட்டர் வாங்கி கொள்ள, மின் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

சொந்த செலவில் மீட்டர் வாங்கி கொடுக்கும் போது, அதை பரிசோதித்த பின், ஊழியர்கள் பொருத்துவர். அந்த நுகர்வோரிடம், மீட்டர் கட்டணம் வசூலிக்கப்படாது.இந்நிலையில், தற்போது, பழுதான மீட்டரை மாற்ற விரும்புவோரும், உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, நேரடியாக வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பழுதடைந்த மீட்டரை மாற்ற விரும்பும் நுகர்வோர், மின் வாரியத்திடம் இருப்பு இல்லாத போது, மீட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து, நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X