சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகையை தர மறுத்த வங்கி பெண் உள்ளிருப்பு போராட்டம்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 நகையை தர மறுத்த வங்கி பெண் உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில்:வங்கியில் நகை திருப்பிய பெண்ணிடம், சுயஉதவிக்குழு கடனுக்காக, நகையை திருப்பி கொடுக்காததால், அவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம், முண்டவிளையைச் சேர்ந்தவர் கலா, 35. இவர் நடைக்காவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில், 1.31 லட்சம் ரூபாய் நகைக்கடன் பெற்றார். நகையை திருப்ப, நேற்று பணம் செலுத்தினார்.பணம் கட்டி நீண்ட நேரம் ஆகியும், நகை கொடுக்கப்பட வில்லை. நகையை கேட்ட போது, 'நீங்கள் அங்கம் வகிக்கும் சுயஉதவிக் குழுவின் கடன் பாக்கி உள்ளது; அதை கட்டினால் தான் நகை தரமுடியும்' என, வங்கி தரப்பில் கூறினர்.

இதனால், மாலை வரை வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கலாவை, வாவறை ஊராட்சி தலைவர் மெற்றில்டா சமாதானம் செய்து, அழைத்து சென்றார். பின் ஊராட்சி தலைவர், போலீசார், வங்கி அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர்.சுயஉதவிக்குழு தலைவர் வந்து, கடன் கணக்கில், 25 ஆயிரம் ரூபாய் செலுத்திய பின், நகை திருப்பி கொடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X