பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் உச்சத்தை தொட்ட பத்திரப்பதிவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ந்து வரும் நிலையில், ஒரே நாளில் அதிகபட்சமாக, 20 ஆயிரம் பத்திரங்கள் பதிவாகி இருப்பது, பதிவுத் துறைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், ஏப்ரல், 20 முதல், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட எல்லையை கடப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில், பத்திரப்பதிவு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.நடப்பு நிதியாண்டில், 14 ஆயிரத்து, 435 கோடி ரூபாய், வருவாய் இலக்காக பதிவுத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், 17 சதவீத வருவாயை மட்டுமே பதிவுத் துறை எட்டியுள்ளது.இதனால், இந்த நிதியாண்டில் வருவாய் இலக்கை எட்டுவது பதிவுத் துறைக்கு சிக்கலாகி உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், 20 ஆயிரம் பத்திரங்கள் பதிவானதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:மூன்று ஆண்டுகளில் தற்போது தான், அதிகபட்ச எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகிஉள்ளன.ஊரடங்கால் பொருளாதாரம் முடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், பத்திரப்பதிவு அதிகரித்துள்ளது வியப்பாக உள்ளது.இதில், பெரும் பாலான பத்திரங்கள், நில விற்பனை மற்றும் நிறுவன நடவடிக்கைகள் சார்ந்தவை.

புரட்டாசி மாதத்தில் பத்திரப்பதிவு செய்வதை தவிர்க்க நினைப்போர் பலரும், தற்போது பத்திரங்களை பதிவு செய்துள்ளனர்.அடுத்து வரும் நாட்களில், இது தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X