பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

சிவகங்கை, : அரசு, உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், தனியார் தொழிற்கல்வி நிறுவனங்களில் பயிலும்மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

முதுகலை, பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வி படிப்பவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குமிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வி பயிலும் நிறுவனங்களில் விண்ணப்பங்களை பெற்று புதுப்பித்தலுக்கு நவ., 10க்குள்ளும், புதியதாக விண்ணப்பம் செய்பவர்கள் நவ.,30க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.உரிய சான்றுகளுடன், தங்களது வங்கி கணக்கு விபரங்களை வழங்க வேண்டும்.சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவ.,15ல் துவங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கு டிச.,15க்கு முன்பும், புதிய விண்ணப்பங்களுக்கு ஜன.,31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகத்தை அணுகலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X