பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லி கற்கள் பரப்பி ரெண்டு மாசம் ஆகியும் ரோடு போடலை

Added : செப் 16, 2020
Share
Advertisement

அன்னுார்:அல்லிக்காரம்பாளையத்தில் ரோடு போட ஜல்லி கற்கள் பரப்பிய பின், 2 மாதமாக பணி முடங்கியதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.ஒட்டர்பாளையம் ஊராட்சி, அல்லிக்காரம்பாளையத்தில் இருந்து, அன்னுார் முதல் அச்சம்பாளையம் வரையிலான ரோட்டுக்கு, இணைப்புப் பாதை அமைக்கும் பணி இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கியது. குழியும் மேடுமாக இருந்த பாதை, மண் கொட்டி சமப்படுத்தப்பட்டு அதன் மேல் ஜல்லி கற்கள் பரப்பப்பட்டன.அதன் பிறகு 2 மாதமாகியும், அடுத்த கட்ட பணி நடக்கவில்லை. இதனால் இந்த பாதையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.இப்பணி முடிந்தால், கோவை ரோட்டிலிருந்து வருவோர் அன்னுார் நகருக்குள் செல்லாமலே, அல்லிக்காரம்பாளையம் வழியாக, மேட்டுப்பாளையம் ரோடு செல்ல முடியும். எனவே, முடங்கிய பணியை விரைவில் துவக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X