சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., நிர்வாகி கொலை உறவினர்கள் சாலை மறியல்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 பா.ஜ., நிர்வாகி கொலை உறவினர்கள் சாலை மறியல்

ஓசூர்,:பா.ஜ., இளைஞரணி தலைவர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றிய, பா.ஜ., இளைஞரணி தலைவர் ரங்கநாதன், 35; நேற்று முன்தினம் மாலை, தன் மகன் பிறந்த நாளுக்கு, கேக் வாங்க சென்றார்.பஸ் நிறுத்தம் அருகே, வட மாநில தொழிலாளி ஒருவர், கெலமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன், தன் பிறந்த நாளை கொண்டாடினார். இதற்கு, போத்தசந்திரத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, ரங்கநாதன் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார்.

இதனால், ஆத்திரமடைந்த போத்தசந்திரத்தைச் சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ரங்கநாதன் வீட்டிற்கு, கார் மற்றும் பைக்கில் சென்றனர். வீட்டிற்கு வெளியே நின்றிருந்த ரங்கநாதனை, அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க முயன்ற, அவரது மனைவி கீதா, 25 அண்ணன் மஞ்சுநாத், 37 ஆகியோரையும் தாக்கினர். படுகாயமடைந்த ரங்கநாதன், கெலமங்கலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.நேற்று காலை, 7:00 மணிக்கு, கெலமங்கலம் சாலையில், அவரது உறவினர்கள் மற்றும் பா.ஜ.,வினர் மறியலில் ஈடுபட்டனர்.

ஏ.டி.எஸ்.பி., சக்திவேல் மற்றும் போலீசார், பா.ஜ., மாநில துணைத் தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோரிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, மறியல் கைவிடப் பட்டது. கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதியில், நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ரங்கநாதன் கொலையில், 20- 26 வயதுடைய ஒன்பது பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. ஒருவரை பிடித்து விசாரிக்கின்றனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X