பொது செய்தி

தமிழ்நாடு

ஆதி திராவிட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

சூலூர்:ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு, சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி கூறியுள்ளதாவது:சூலூர் வட்டாரத்தில் உள்ள ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு, சொட்டு நீர் பாசனம் அமைக்க, 100 சதவீதமும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.குழி எடுக்கும் விவசாயிக்கு, இரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் மானியமும் புதிய தண்ணீர் தொட்டி கட்ட, ரூ.40 ஆயிரமும், மோட்டார் மற்றும் டீசல் என்ஜின் வாங்க, 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.சிட்டா, அடங்கல், புலப்படம், சிறு, குறு விவசாயி சான்று, ரேஷன், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவுள்ள இரு போட்டோக்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, சூலூர் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X