பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி: தூய்மையானது குட்டை

Added : செப் 16, 2020
Share
Advertisement
 தினமலர் செய்தி எதிரொலி: தூய்மையானது குட்டை

பெ.நா.பாளையம்:'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், சோமையம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள குட்டை துாய்மையானது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள குட்டையில் சிலர், சாயக்கழிவு நீரை கொட்டிச் சென்றனர்.குட்டை அசுத்தமாகி, நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை உருவானது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், குளத்தில் உள்ள சாயக்கழிவு நீரை முற்றிலுமாக அகற்றி துாய்மைப்படுத்தியது.சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'குளத்தில் உள்ள சாயக்கழிவு நீரின் தன்மை குறித்து ஆய்வு செய்ய, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், 'சாம்பிள்' எடுத்துச் சென்றுள்ளனர். குட்டையில் மேலும் சாயக்கழிவு நீரை ஊற்றாமல் இருக்க, அப்பகுதியில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X