பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரி கட்டணம் குறைக்க வலியுறுத்தல்

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:'தமிழக அரசு கையகப்படுத்திய, பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லுாரி கட்டணத்தை குறைக்க வேண்டும்' என, தமிழக மருத்துவ மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கத்தின் பொது செயலர், ஹரிகணேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஈரோடு பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை, தமிழக அரசு கையகப்படுத்தி, ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையாக மாற்றியமைத்தது. இந்த நடவடிக்கையால், ஈரோடு மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர்.

இந்த கல்லுாரியை அரசு கையகப்படுத்திய பின், மாணவர்கள் பழைய கட்டணமான, ஐந்து லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.அரசு கல்லுாரியில் இவ்வளவு பெரிய தொகையை கட்டணமாக வசூலிப்பது நியாயமில்லை. ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள், இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே, மற்ற அரசு மருத்துவ கல்லுாரிகளில் வசூலிக்கப்படுவது போல, கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X