கழிவு எரிக்கும் புகையால் வாகன ஓட்டிகள் தவிப்பு| Dinamalar

கழிவு எரிக்கும் புகையால் வாகன ஓட்டிகள் தவிப்பு

Added : செப் 16, 2020
Share
 கழிவு எரிக்கும் புகையால்  வாகன ஓட்டிகள் தவிப்பு

அன்னுார்:அன்னுார் அருகே ரோட்டோரத்தில் கழிவுகளை எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.அன்னுாரில் இருந்து வாகராயம்பாளையம் செல்லும் பாதையில் உள்ள ஆலாம்பாளையத்தை அடுத்து, ரோட்டோரத்தில் இருபுறமும், தமிழக மற்றும் கேரள லாரிகள் கழிவு கொட்டி செல்கின்றன. சிலர் அதற்குத் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அடிக்கடி அப்பகுதி முழுக்க, புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.வாகனங்களில் செல்வோர், இதனால் பாதை தெரியாமல், மூச்சுத்திணறலுடன் பயணிக்க வேண்டியுள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X