சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5,000 கோடி மோசடி 13 பேருக்கு போலீஸ் வலை

Added : செப் 16, 2020
Share
Advertisement

சேலம்:கேரளா, தமிழகத்தில், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய, கேரளா, கோவை போலீசார், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கோவை, பீளமேடு ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரமேஷ், 40. இவரது தலைமையில், 14 பேர், 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்' நிதி நிறுவனத்தை துவங்கி, கவர்ச்சி விளம்பரம் வெளியிட்டு, வசூலில் ஈடுபட்டனர். இதில், கேரளா, கோவை, சேலத்தில், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்தது. இது குறித்த புகார்படி, சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீசார், கவுதம் ரமேஷ், அவரது கூட்டாளி பிரவீன்குமாரை கைது செய்தனர்.

அவர்களை, நேற்று முன்தினம், கேரளா மாநிலம், மலப்புரம் போலீசார், காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், மோசடி கும்பலை சேர்ந்த 13 பேரின் முழு விபரங்களை, இருவரும் தெரிவித்தனர்.அவர்களை கைது செய்ய, கேரளா, கோவை போலீசார், தனித்தனியாக தனிப்படை அமைத்து, தமிழகம், கேரளாவில் தேடி வருகின்றனர்.

இது குறித்து, கேரளா போலீசார் கூறியதாவது:கேரளாவில் கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடத்திய கும்பல், கோவையில், 20 இடங்களில் பங்களாக்களை வாங்கி குவித்துள்ளது. மேலும், தங்கள் உறவினர், வக்கீல்களுக்கு விலை உயர்ந்த கார்கள், நகைகளை வாங்கி கொடுத்து உள்ளனர்.அந்த பட்டியலை, சேலம் போலீசாரிடம் இருந்து பெற்றுள்ளோம்.

மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், பினாமிகள் பெயரில் வாங்கி குவித்த சொத்துகளின் பட்டியல் தயாராகிறது.அவற்றை பறிமுதல் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X