பொது செய்தி

தமிழ்நாடு

நாளை மூன்று தேர்வுகள் மாணவர்கள் குழப்பம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

காரைக்குடி : மத்திய பல்கலை. உட்பட மூன்று முக்கிய நுழைவுத் தேர்வு நாளை(செப்.18) ஒரே நாளில் நடப்பதால், எந்த தேர்வுக்கு செல்வது என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருவாரூர் சென்ட்ரல் யுனிவர்சிட்டி உட்பட 14 யுனிவர்சிட்டிகளில் நாளை பொது நுழைவுத் தேர்வு நடக்கிறது.அதேபோல், புதுச்சேரி யுனிவர் சிட்டி மற்றும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் எஜூகேசன் அண்ட் ரிசர்ச் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு என மூன்று முக்கிய தேர்வுகள் நாளை (செப்.18.) ஒரே நாளில் நடக்கிறது.பல மாணவர்கள் இம்மூன்று தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளனர். நாளை ஒரே நாளில் தேர்வு நடப்பதால், மூன்று தேர்வுகளில் எந்த தேர்வுக்கு செல்வது என குழப்பத்தில் உள்ளனர்.

எனவே நுழைவுத்தேர்வுகளை ஒரே நாளில் வைப்பதை தவிர்த்து, போதிய இடைவெளியோடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும் பெற்றோர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X