பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதி மீறல்: ரூ.41 லட்சம் அபராதம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:கொரோனா தொற்று தடுப்பு விதிகளை மீறியதாக, பொது சுகாதார அவசர சட்டத்தின் படி, ஒரு வாரத்தில், 41 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. நோய் தடுப்பு விதிகளை, பலர் சரிவர கடைப்பிடிப்பதில்லை. நோய் பரவலை தடுக்கும் வகையில், விதிகளை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், அரசு அவசர சட்டத்தை, ஒரு வாரத்திற்கு முன் அமல் படுத்தியது.

அதன்படி, முக கவசம் அணியாமல் சென்றால், 200 ரூபாய்; பிற விதிமீறல்களுக்கு, 500 முதல், 5,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, சிறப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவசர சட்டத்தின் கீழ், ஒரு வாரத்தில், 20 ஆயிரத்து, 163 பேரிடம், 41 லட்சத்து, 97 ஆயிரத்து, 225 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில், முக கவசம் அணியாதோரிடம் தான் அதிகளவில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நோய் தடுப்பு விதிகளை மீறிய கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X