சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கேட்டு சித்ரவதை; வழக்கு பதிய கோர்ட் உத்தரவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்தது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிய, மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்த ரங்கராஜ் மகள் அன்னபூரணி,23, கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்த புகார் மனு:கோவை காந்திபுரத்தில், பஞ்ச ரத்தின ராசி கற்கள் கடை நடத்தி வரும், ஸ்ரீ காந்த் மகன் ரித்திஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, இரண்டு கிலோ தங்கம், 58 கிலோ வெள்ளி பொருட்கள், 66 கேரட் வைர நகை, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள், வைர, பிளாட்டின மோதிரங்கள் வரதட்சணையாக, எனது பெற்றோர் கொடுத்தனர்.திருமணமான மூன்று மாதத்தில், வீடு, கார், நகை வாங்கி வருமாறு கேட்டு சித்ரவதை செய்தனர். வரதட்சணை வாங்கி வராவிட்டால், விவாகரத்து செய்து விடுவோம் என மிரட்டி, பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் தெரிவித்து இருந்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன் பேரில், அன்னபூரணி கணவர் ரித்திஷ்,24, மாமனார் ஸ்ரீ காந்த், மாமியார் கல்பனா ஆகியோர் மீது, ஆர்.எஸ்.புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X