பொது செய்தி

தமிழ்நாடு

இளநிலை உதவியாளர்களுக்கு இன்று கலந்தாய்வு: சி.இ.ஓ.,

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, இன்று முதல் கலந்தாய்வு துவங்குகிறது.தமிழகம் முழுக்க, அமைச்சு பணியாளர் காலியிடங்களுக்கு, அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு நடத்தி, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில், பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கப்பட்ட, 633 இளநிலை பணியாளர் காலியிடங்களில், கோவைக்கு எட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன.இதற்கு, தகுதியானோரின் கல்வி சான்றிதழ், உடற்கூறு தகுதிச்சான்று, ஜாதிச்சான்றிதழ் உள்ளிட்ட அசல் சான்றிதழ்கள் சரிபார்க்க, கலந்தாய்வு இன்று துவங்குகிறது. வரும் 18ம் தேதியுடன், கலந்தாய்வு நிறைவடைகிறது.தகுதியுள்ள அழைப்பு கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விபரங்களை பெறலாம் என, சி.இ.ஓ., உஷா தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X