பொது செய்தி

தமிழ்நாடு

வனபத்ரகாளியம்மன் கோவில் நடை இன்று திறந்திருக்கும்

Added : செப் 16, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:மகாளய அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் நடை, இன்று திறந்திருக்கும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.ஆண்டுக்கொருமுறை மகாளய அமாவாசை வரும். இந்த நாளில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை வழிபட்டு செல்வர்.இந்த ஆண்டு, வைரஸ் தொற்று காரணமாக, கோவில் திறக்கப்படுமா என்ற சந்தேகம், பக்தர்களிடையே எழுந்தது. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, வனபத்ரகாளியம்மன் கோவில் நடை திறக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, இன்று கோவில் நடை திறந்திருக்கும் என, வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X