கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., இல்லத்தை எடுக்க அவசர சட்டம் தீபக் வழக்கில் அரசுக்கு 'நோட்டீஸ்'

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் தோட்டம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்கு, தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து, தீபக் மனு தாக்கல் செய்து உள்ளார். மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தாக்கல் செய்த மனு:மறைந்த முதல்வர் ஜெ.,யின் சட்டப்பூர்வ வாரிசாக, நானும், என் சகோதரி தீபாவும் உள்ளோம். அவர் வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா இல்லத்தின் மீது, எங்களுக்கு உரிமை உள்ளது. நினைவு இல்லமாக மாற்றவும், அரசின் வசம் இல்லத்தையும், அசையும் சொத்துக்களையும் எடுப்பதற்கும், ஜெ., நினைவு பவுண்டேஷன் அமைப்பதற்கும், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதிகாரம் இல்லை



அவசர சட்டத்தின் நகலை, உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட விதம், அதை வெளிப்படுத்திய விதத்தை பார்க்கும் போது, வெளிப்படைத்தன்மை இல்லை என்பது தெரிகிறது.அவசர சட்டம் தொடர்பான மசோதாவை, இந்த சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டாம் என, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினேன்; அதற்கு பதில் இல்லை.

மசோதா அறிமுகம் செய்யப்பட்டால், என் உரிமைகள் பாதிக்கப்படும். தனிநபர் சொத்தை எடுப்பதற்கு, அவசர சட்டம் பிறப்பிக்க, அரசுக்கு அதிகாரம் இல்லை.எனவே, அவசர சட்டம் செல்லாது என, அறிவிக்க வேண்டும். வேதா இல்லத்தை கையகப்படுத்தவும், நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைகளுக்கும், தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.


உத்தரவு



மனு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X