தமிழ்நாடு

செல்வ சிந்தாமணி குளத்தில் இப்படி பண்றீங்களே! மழை நீரை வீணாக்கலாமா

Updated : செப் 17, 2020 | Added : செப் 16, 2020
Share
Advertisement
செல்வ சிந்தாமணி குளத்தில் இப்படி பண்றீங்களே! மழை நீரை வீணாக்கலாமா

கோவை;கோவை, செல்வ சிந்தாமணி குளத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், பருவ மழை சமயங்களில், தண்ணீர் தேக்க முடியாத சூழல் தொடர்கிறது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாவது, பணிகளை விரைந்து முடித்து, மழை நீரை சேமிக்க வேண்டும்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில், எட்டு குளங்களில் வேலைகள் நடந்து வருகின்றன. இதில், 'குயிக் வின் புராஜக்ட்' என்ற பெயரில், உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் செய்யும் வேலையை, அக்., மாதத்துக்குள் முடிக்க, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆய்வுக்கு வந்திருந்த, தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் ஹர்மந்தர்சிங், 'எப்போது வந்தாலும், இவ்விரு குளங்களுக்கு மட்டுமே அழைத்து வருகிறீர்களே; அடுத்த முறை வரும்போது, மற்ற குளங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்' என கடிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில், மற்ற குளங்களில் வேலைகள், ஆமை வேகத்தில் நடக்கின்றன. அதன் காரணமாக, சென்னையில் இருந்து உயரதிகாரிகள் வந்தால், உக்கடம் மற்றும் வாலாங்குளத்துக்கு மட்டும் அழைத்துச் செல்கின்றனர்.மிக முக்கியமாக, செல்வ சிந்தாமணி குளத்தில், வேலை துவங்கி ஓராண்டுக்கு மேலாகி விட்டது. உபரி நீர் வெளியேற்றும் இடத்தில், ஷட்டர் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.'ஸ்மார்ட் சிட்டி' பணிக்கு இடையூறாக இருக்கும் என கூறி, கடந்தாண்டு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது, கிடைத்த நீரை தேக்கவில்லை. ஆற்றில் திறந்து விடப்பட்டது.நடப்பாண்டும், கடந்த ஆக., மாதம் கனமழை பெய்தபோது, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குளங்களுக்கு திருப்பி இருந்தால், செல்வ சிந்தாமணியில் தேக்கியிருக்கலாம்; பணிகள் பாதிக்கும் என்பதற்காக, ஆற்றில் விடப்பட்டது.
அடுத்த மாதம், வட கிழக்கு பருவ மழை பெய்யத் துவங்கும். அதனால், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை விரைவுபடுத்தி, மழை துவங்குவதற்குள் முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமீபத்தில் ஆய்வுக்கு வந்திருந்த, தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் ஹர்மந்தர்சிங், 'எப்போது வந்தாலும், இவ்விரு குளங்களுக்கு மட்டுமே அழைத்து வருகிறீர்களே; அடுத்த முறை வரும்போது, மற்ற குளங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்' என கடிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X