சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் துன்புறுத்தலால் மரணம் ரூ.1 கோடி இழப்பீடு கோரி வழக்கு

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை : தென்காசி வீரகேரளம் புதுார் நவநீத கிருஷ்ணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:எனது மூத்த மகன் குமரேசன் 25. ஆட்டோ டிரைவர். இவரை ஒரு இடப்பிரச்னை தொடர்பாக வீரகேரளம் புதுார் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசாரில் சிலர் தகாத வார்த்தைகளால் பேசி, குமரேசனை தாக்கினர். காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றார். ஜூன் 27 ல் இறந்தார்.சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். என் மற்றொரு மகன் இசக்கிமுத்துவிற்கு அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஆர்.பொங்கியப்பன் தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி அக்.,9 க்கு ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X