சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை செய்த தாய், மகள் உட்பட 3 பேர் உடலை அடக்கம் செய்த போலீஸ்

Added : செப் 16, 2020
Share
Advertisement

நாகர்கோவில்:குடும்ப வறுமையில் இறந்த முதியவர், தற்கொலை செய்த மனைவி, மகள் உடலை, போலீசார் அடக்கம் செய்தனர்.

குமரி மாவட்டம், நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்தவர், வடிவேல் முருகன், 78; மனைவி பங்கஜம், 67. திருமணமாகாத மகள்கள் மாலா, 46; மைதிலி, 45, இருந்தனர்.கொரோனா ஊரடங்கால், வேலையின்றி இருந்த வடிவேல் முருகன் குடும்பத்தை, வறுமை வாட்டியது. வடிவேல் முருகன், 14ம் தேதி இறந்தார்.மறுநாள் பங்கஜம், இரண்டு மகள்களுடன், சுசீந்தரம் அருகே உள்ள குளத்தில் குதித்தார். இதில் பங்கஜம், மாலா இறந்தனர். மைதிலி, நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இறந்த வடிவேல் முருகன், மனைவி, மகள் ஆகியோரின் பிரேத பரிசோதனை முடிந்தும், உடல்களை வாங்க, உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனால், மூவர் உடல்களையும், போலீசாரே சொந்த செலவில், நேற்று அடக்கம் செய்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மைதிலி, குடும்ப வறுமை, பல மாதங்களாக சாப்பிடாமல் இருந்தது போன்றவற்றை கூறி அழுதார். 'என்னையும் கொலை செய்து, தந்தை, தாய், சகோதரியுடன் அனுப்புங்கள்' என, கதறியுள்ளார். இது, டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களை வேதனையில் ஆழ்த்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X