சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக மதுரை மாவட்டம் உலைப்பட்டியில் அகழாய்வு மேற்கொள்ள தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மோர்ப்பண்ணை வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: உசிலம்பட்டி சூலப்புரம் அருகே உலைப்பட்டி மலையடிவாரத்தில் பழங்கால முதுமக்கள் தாழி, பானைகள், ஓடுகள், கல்வட்டங்கள், எலும்புகள், குடுவைகள், மீன் வடிவ சின்னங்கள், வளையல்கள், எலும்பு குவியல்கள், பாசி வகைகள், கல் வட்டங்கள், குத்துக்கல், கற்பலகைகள் உள்ளன. இரும்பு உருக்கு உலை கண்டறியப்பட்டுள்ளது. கரிய நிற இரும்புக் கழிவுகள் குவியலாக உள்ளன. இது மிக அரிதான ஒன்று. பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்கு விரிவான அகழாய்வு மேற்கொண்டால் மிகப் வரலாற்று உண்மைகள் வெளியே வரும்.

இது தொடர்பாக, 'கீழடியை மிஞ்சும் உலைப்பட்டி, கி.மு.5ம் நுாற்றாண்டு இரும்பு உலை கண்டுபிடிப்பு,' தலைப்பில் 'தினமலர்' நாளிதழில் ஜூலையில் செய்தி வெளியானது .உலைப் பட்டியில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தீரன் திருமுருகன் மனு செய்தார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு மத்திய தொல்லியல் துறை இயக்குனர் ஜெனரல், தமிழக தொல்லியல்துறை கமிஷனர், மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நவம்பருக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X