சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறநிலைய துறையின் 1.53 ஏக்கர் நிலம் காஞ்சிபுரம் வாலாஜாபாதில் 'அபேஸ்'

Added : செப் 16, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 அறநிலைய துறையின் 1.53 ஏக்கர் நிலம் காஞ்சிபுரம் வாலாஜாபாதில் 'அபேஸ்'

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாதில், ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான, 1.53 ஏக்கர் நிலம், சார் - பதிவாளர் துணையுடன், தனியார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு இருக்காது.இருப்பினும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், அந்தந்த பகுதி சார் - பதிவாளர்கள் துணையுடன், போலி ஆவணங்கள் வாயிலாக, கோவில் நிலங்களை அபகரித்து வருகின்றனர்.

கோவில்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களை, முறையாக ஆவணப்படுத்தாததே, இதற்கு காரணம்.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே, அவளூர் கிராமத்தில், அறநிலைய துறை பெயரில் உள்ள, 1.53 ஏக்கர் நிலம், தனியார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அறநிலைய துறை அதிகாரிகள் கூறியதாவது:அவளூர் கிராமத்தில், 5/5 என்ற, சர்வே எண்ணுக்கு உட்பட்ட, 1.53 ஏக்கர் நிலம், ஹிந்து சமய அறநிலையத்துறை பெயரில் உள்ளது. பதிவுத்துறையின் வழிகாட்டி மதிப்பு பட்டியலிலும், இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், 2018 டிசம்பர், 26ல், தனியார் சிலர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிகாட்டி மதிப்பில் அரசு நிலம் என்று உள்ளது, தனியார் பெயருக்கு எப்படி பத்திரப்பதிவு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாலாஜாபாத் சார் -பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பதிவுத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சார் - பதிவாளர்களே, இப்படி நில அபகரிப்புக்கு துணைபோவதை, பதிவுத்துறை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
17-செப்-202021:20:09 IST Report Abuse
m.viswanathan திராவிட அண்ணன் காட்டிய வழி அம்மா
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-செப்-202019:22:28 IST Report Abuse
Krishnamurthy Venkatesan கூட்டு களவாணி சார் பதிவாளருக்கு மிக கடுமையான தண்டனை தரவேண்டும். மற்ற ஏமாற்றுக்காரர்களுக்கு இந்த தண்டனை பாடமாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
17-செப்-202015:26:17 IST Report Abuse
r.sundaram அறநிலையத்துறை அந்த இடத்தை பாதுகாக்க என்ன செய்தது? வேலி போட்டு இருக்கிறதா? இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று பலகை வைத்திருக்கிறதா? இதையெல்லாம் செய்யாமல் அறநிலையத்துறை சும்மா இருந்தால் வருத்தப்படத்தான் வேண்டும் வேறு வழி இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X