பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' மாதிரி தேர்வு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:கோவை பாரதியார் பல்கலை சார்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்திய, 'ஆன்லைன்' மாதிரி தேர்வில், 30 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

கொரோனா காரணமாக, இறுதியாண்டு மாணவர்களுக்கான, 'செமஸ்டர்' தேர்வுகள், ஆன்லைனில் வரும், 21 முதல், 30ம் தேதிக்குள் நடத்தப்படும் என, பாரதியார் பல்கலை சார்பில், அட்டவணை வெளியிடப்பட்டது.'ஆன்லைன்' தேர்வு குறித்து, மாணவர்களின் சந்தேகங்களை போக்கும் வகையில், மாதிரி தேர்வு நடந்தது.

இத்தேர்வில், மாணவர்கள் வீடுகளில் இருந்தே பங்கேற்றனர். காலை, 9:30 மணியளவில் தேர்வு துவங்கியது.வினாத்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, விடையளிக்க துவங்கினர். பகல், 12:45 மணி வரை, மாணவர்கள் விடையளிக்க, கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதன் பின், 45 நிமிடங்கள் மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை, 'ஸ்கேன்' செய்து, 'ஆன்லைன் போர்ட்டலில்' பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. மாதிரித் தேர்வில், 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X