பொது செய்தி

தமிழ்நாடு

25 சதவீத இடஒதுக்கீட்டில் அட்மிஷன்: வரும் 25 வரை விண்ணப்பிக்கலாம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடத்த, வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், சிறுபான்மையரல்லாத தனியார் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை, கல்வி கட்டணமின்றி படிக்கலாம். இதற்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம், ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பள்ளியின் துவக்க வகுப்புகளில் மட்டுமே, இத்திட்டத்தில் குழந்தைகளை சேர்க்க முடியும்.அந்தந்த பள்ளி தகவல் பலகையில், சேர்க்கைக்கு தகுதியுள்ள இடங்கள் குறித்து அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வட்டார கல்வி அலுவலர்கள் கூறுகையில், 'ஆன்லைன் வாயிலாக, வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளியில் தகுதியான இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இவர்களின் பட்டியல், கல்வி இணையதளத்திலும் வெளியிடப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X